முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை

புதன்கிழமை, 11 டிசம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டியும் குறைந்தும்  விற்பனை செய்யப்பட்டு வந்தது. டிசம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமே நீடித்து வருகிறது. சென்னையில் நேற்று (டிசம்பர் 11) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமிற்கு 6 ரூபாய் குறைந்து 3,591 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.48 குறைந்து ரூ.28,728க்கு விற்பனையானது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ.46.50க்கு விற்பனை செய்யப்பட்டது.  அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 46,500 ஆக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து