எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர் : பெங்களூருவில் வரும் ஜனவரி 3-ம் தேதி நடைபெற உள்ள 107-வது தேசிய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்திய அறிவியல் மாநாடு வரும் ஜனவரி மாதம் 3 முதல் 7-ம் தேதி வரை பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இது குறித்துக் கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் கூறும் போது, இந்திய அறிவியல் மாநாடு, நமது பழமையான, பெருமை வாய்ந்த அறிவியல் நிகழ்வுகளில் ஒன்று. இது பெங்களூருவில் நடப்பது குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். இந்த ஆண்டு மாநாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கிராமப்புற வளர்ச்சி என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் அறிவியல் திருவிழாவில் 15 ஆயிரம் அறிவியலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், பாதுகாப்புத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அறிவியல் மாநாட்டுடன், பிரைட் ஆப் இந்தியா 2020 என்ற கண்காட்சியும் நடைபெற உள்ளது. இதில் புத்தாக்க அறிவியல் சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள், பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


