முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிசை மாற்று வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் - அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். உத்தரவு

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : குடிசை மாற்று வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும்  வீட்டுவசதி திட்டப் பணிகள் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.     

இந்த ஆய்வு கூட்டத்தில், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், குடிசை மாற்று வாரியத்தால், தமிழகத்தில்  இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள், முன்னேற்றத்திலுள்ள வீடுகள், ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ள வீடுகள், ஒப்பந்தம் கோரப்படவுள்ளவை  மற்றும் மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டியவை ஆகியவை குறித்து கோட்ட வாரியாக,  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். மேலும் தாமாக  வீடு  கட்டும்  திட்டத்தின் கீழ், பயனாளிகளால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், முன்னேற்றத்திலுள்ள வீடுகள் மற்றும் துவங்கப்படவுள்ள வீடுகள் குறித்தும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  ஆய்வுக்கூட்டத்தின் இறுதியில், மேற்கூறப்பட்ட திட்டப் பணிகளை விரைந்து  செயல்படுத்துவதற்கு அனைத்து அதிகாரிகளும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துணை முதல்வர் அறிவுறத்தினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில், வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை  முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் (ம)  குடிசை மாற்று வாரிய  மேலாண்மை இயக்குநர்(முழு  கூடுதல் பொறுப்பு) தா. கார்த்திகேயன், குடிசை மாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குநர் சு. கோபால சுந்தரராஜ், வாரிய தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் அனைத்து கோட்ட செயற்பொறியாளர்கள்  கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து