திருப்பதி மலையடிவாரத்தில் ரூ.15 கோடியில் கோசாலை

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2019      ஆன்மிகம்
Tirupati 2019 07 03

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்கள் முதலில் கோ (பசு) தரிசனம் செய்த பின் மலையேறி செல்லும் வகையில் ரூ.15 கோடியில் மலை அடிவாரத்தில் கோசாலை கட்டப்பட்டு வருகிறது.  

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்கள் முதலில் கோ (பசு) தரிசனம் செய்த பின் மலையேறி செல்லும் வகையில் ரூ.15 கோடியில் மலை அடிவாரத்தில் கோசாலை கட்டப்பட்டு வருகிறது.

மேலும் அங்கு 30 நாட்டு பசுக்களை பராமரிக்கும் வகையில் தொழுவம், கோபூஜை தொடர்பான தகவல் மையம் ஆகியவற்றை சேகர் ரெட்டி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.
சப்த கோபூஜையில் ஒவ்வொரு நாளும் 7 நாட்டு பசுக்கள் அருகில் இருக்கும் தொழுவத்திலிருந்து கொண்டு வந்து விடப்படும்.
அங்கு செல்லும் பக்தர்கள் கோ பூஜையில் கலந்து கொள்வதுடன், கோ துலாபாரம் என்ற பெயரில் பசுக்களுக்கு தேவையான தீவனங்களை துலாபார காணிக்கையாக செலுத்தலாம்.

தீவனங்களை செலுத்த இயலாத பக்தர்கள் தீவனங்களின் விலை மதிப்பை பணமாகவும் துலாபார காணிக்கையாக செலுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்ய உள்ளது.

இந்த நிலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால்,கோசாலையின் நன்கொடையாளர் சேகர் ரெட்டி, விசாகசாரதா பீடாதிபதி சொரூபானந்தேந்திரா சாமிகள், கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் கோசாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து