முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019-ல் திருப்பதி கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1,161.74 கோடி

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2020      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2019-ம் ஆண்டில் பக்தர்கள் ரூ.1,161.74 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் 2019-ம் ஆண்டில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு கடந்த ஆண்டு 12 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். நாள்தோறும் அவர்கள் செலுத்தும் காணிக்கைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, நிர்வாகச் செலவுகள் போக மீதமுள்ளவற்றை வங்கியில் வைப்புநிதியாக தேவஸ்தானம் சேமித்து வைத்து வருகிறது. நடைபயணமாக மலையேறி தரிசனம் செய்வோருக்கு ஒரு லட்டு இலவசமாகவும், தர்ம தரிசனம் செய்வோருக்கும், மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கும் 10 ரூபாய்க்கு 2 லட்டுகளும் கூடுதலாக 2 லட்டுகள் பெற 25 ரூபாய் என்றும் விற்பனை செய்கிறது. அதே போல் ரூ. 300 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்வோர், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இரண்டு லட்டுகள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இனிமேல் திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் அனைவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதேபோல் கூடுதல் லட்டு வாங்க 50 ரூபாய் கொடுத்து ஒரு லட்டு வாங்கிக் கொள்ளலாம். இது வரும் வைகுண்ட ஏகாதசி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து