முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை சட்டம் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு மனித உரிமை வழங்கியுள்ளார் பிரதமர் மோடி: அமித்ஷா பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத் : நடந்து முடிந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டம் விவாதத்திற்கு பின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பாணையை  வெளியிட்டது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆமதாபாத்தில் வசிப்பவர்களால் எழுதப்பட்ட 5 லட்சம் கடிதங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பும் விழா நடந்தது. இதில் பங்கேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா  உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

வார்த்தைக்காக மட்டுமல்லாமல் இதயத்தில் இருந்து எழுதப்பட்ட நன்றி கடிதங்கள் இவை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பரப்படும் பொய்களுக்கான பதில் தான் இந்த பொதுக்கூட்டம். குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் பிரதமர் மோடி, லட்சக்கணக்கான மக்களுக்கு மனித உரிமைகளை வழங்கியுள்ளார். இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை காட்ட முடியுமா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோருக்கு சவால் விடுக்கிறேன்.

தங்கள் மதம் மற்றும்  சுயமரியாதையை காப்பாற்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்தியா வருகின்றனர். அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் உள்துறை அமைச்சர், முதல்  ஜனாதிபதி, மகாத்மா காந்தி என அனைவரும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு யார் வந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என கூறியிருந்தனர். பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மற்றும் சமணர்கள் வேறு எங்கும் செல்ல முடியாது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும்  சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி உறுதியளித்தது. நீங்கள் அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம். அதை ஏன் எதிர்க்கிறீர்கள்? இது பற்றி 2006 மற்றும் 2009-ம் ஆண்டுகளில்,  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடிதம் எழுதினார். அதில், இந்துக்கள், சீக்கியர்களை மட்டும் குறிப்பிட்டபோதும், நாங்கள் அதனுடன், பார்சிகள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் கீழ் உள்ளடக்கியுள்ளோம் என்றும் அமித்ஷா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து