தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 20-ம் தேதி முதல் இலவச லட்டு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2020      ஆன்மிகம்
tirupathi 2020 01 12

திருமலை : வார இறுதி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சுவாமியை தரிசனம் செய்ய சுமார் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வரும் 20-ம் தேதி முதல் திருமலைக்கு வந்து சுவாமியை தரிசிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி தலா ஒரு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான லட்டு பிரசாதங்களை தயாராக வைத்திருக்க தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு சுமார் 65 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை வழிபடுவதால், அந்த அளவுக்கு இலவச லட்டு பிரசாதங்கள் தட்டுப்பாடின்றி வழங்க திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி நாள் ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் லட்டு வீதம் மாதத்துக்கு சுமார் 22 லட்சம் லட்டு பிரசாதங்கள் தேவைப்படுகிறது. இதற்காக கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு லட்டு பிரசாதங்களை தயாரித்து வருகின்றனர். இதுதவிர, கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு, ரூ. 50-க்கு ஒரு லட்டு வீதம் வழங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து