இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியா

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2020      விளையாட்டு
Hardik Pandya 2020 01 13

மும்பை : வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட ஹர்திக் பாண்டியா, வலைப்பயிற்சியில் பந்து வீசினார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் முதுகு வலி காரணமாக லண்டனில் ஆபரேசன் செய்து கொண்டார். இதனால் சில மாதங்களாக அணியில் இடம் பெறாமல் இருந்தார்.தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டுள்ள இவர் நியூசிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்தார். கடைசி நேரத்தில் சர்வதேச தரத்திற்கு பந்து வீசும் அளவில் உடற்தகுதி பெறவில்லை என்பதால் இந்திய ஏ அணியில் இருந்து நீக்கப்பட்டார்.அவர் நீக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழும்பின. இந்நிலையில் வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுடன் இணைந்து ஒரு பயிற்சி செசனில் விளையாடினார்.அப்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருடன் இணைந்து பந்தை குறிவைத்து தாக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின் வலையில் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மேற்பார்வையில் பந்து வீசி பயிற்சி மேற்கொண்டார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து