இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் பி.வி. சிந்து - சாய்னா மோத வாய்ப்பு

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2020      விளையாட்டு
PV Sindhu-Saina 2020 01 13

இந்தோனேசியா : இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பி.வி.சிந்து - சாய்னா நேவால் ஆகியோர் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் காலிறுதியோடு வெளியேறினர். இந்நிலையில் இன்று தொடங்கும் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இருவரும் 2 - வது செட்டில் நேருக்குநேர் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐந்தாம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து தொடக்க சுற்றில் அயா ஒஹோரியை எதிர்கொள்கிறார். சாய்னா நேவால் மற்றொரு ஜப்பான் வீராங்கனையான சயாகா டகாஹாஷி தொடக்க போட்டியில் மோதுகிறார்கள்.பி.வி. சிந்து - சாய்னா ஆகியோர் இதுவரை நான்கு முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளனர். இதில் சாய்னா நேவால் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து