Idhayam Matrimony

2-ம் பதிப்பாக தயாரிக்கப்பட்ட வேளாண் புள்ளி விவர புத்தகத்தின் முதல் பிரதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வேளாண் சார்ந்த பல முக்கிய தகவல்களை தொகுத்து இரண்டாம் பதிப்பாக தயாரிக்கப்பட்ட 2019-ம் ஆண்டு வேளாண் புள்ளி விவரப் புத்தகத்தின் முதல் பிரதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அமைச்சர் இரா. துரைக்கண்ணு அதனை பெற்றுக் கொண்டார்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அம்மா,  இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்ற முழக்கத்தோடு, வேளாண் புரட்சிக்கு வித்திட்டார். அவரது வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பல்வேறு புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியதோடு, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்காக பல்வேறு  திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் நலனுக்காக அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு, அடிப்படை புள்ளி விவரம் மிக முக்கியமாகும்.  அந்த வகையில், அனைத்து அலுவலர்களுக்கும் பயன்படும் வகையில் 2018-ம் ஆண்டில் வேளாண் புள்ளி விவரப் புத்தகம் தயாரிக்கப்பட்டது.   தற்போது, வேளாண் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக, இப்புள்ளி விவரங்கள் மேம்படுத்தப்பட்டு,  பல்வேறு புதிய தகவல்களுடன் இரண்டாம் பதிப்பாக 2019-ம் ஆண்டு வேளாண் புள்ளி விவரப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் அகில இந்திய அளவில் தமிழகத்தின் நிலை, மாவட்ட வாரியாக மழை, பயிர் சாகுபடி பரப்பு, உற்பத்தி, நிலப்பயன்பாட்டு விவரம், மேட்டூர் அணை திறக்கப்பட்ட நாள்,  டெல்டா மாவட்டங்களின் கிளை வாய்க்கால்கள் விவரம், பல்வேறு திட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நிதி, பயிர் சாகுபடி செலவு மற்றும் மத்திய அரசு மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் குறைந்த பட்ச ஆதரவு மற்றும் கொள்முதல் விலை விவரம், புதிய ரகங்கள், உர விநியோகம், வேளாண் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் முழுவிவரம், வேளாண் பல்கலைக்கழகத்தின் விவரங்கள், இதுவரை பெற்ற விருதுகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை, கஜா புயல் மற்றும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணம், உழவன் செயலி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் மிக நேர்த்தியான முறையில் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.  வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வேளாண் சார்ந்த பல முக்கிய தகவல்களையும் தொகுத்து இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் டி. ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க. சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி,  வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர்  எஸ்.ஜே.சிரு,  வேளாண்மைத் துறை இயக்குநர்  வ.தட்சிணாமூர்த்தி,  தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முனைவர் ஆர்.முருகேசன்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து