Idhayam Matrimony

கொரோனா வைரசுக்கு சீனாவில் 4-வது நபர் பலி - உலக சுகாதார அமைப்பு இன்று அவசர கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 4-வது நபர் பலியாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் மத்திய நகரான வுகானில் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் தாக்கியவர்கள், கடுமையான சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். இந்த புதிய வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக முதலில் கூறப்பட்டது. இதையடுத்து மனிதர்களிடமிருந்தே மனிதரிடையே பரவும் என கண்டறியப்பட்டது. வுகான் நகரில், இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 170 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 4-வதாக ஒருவர் உயிரிழந்ததாக வுகான் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வுகான் நகரைச் சேர்ந்த 89 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடுமையான சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த புதிய கொரோனா வைரஸ் மற்ற பகுதிகள் மற்றும் அண்டை நாடுகளில் பரவுவதற்கு முன்பு அதன் மூலத்தை கண்டறியுமாறு உலக சுகாதார அமைப்பு சீனா அரசை முன்னதாக வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், புதிய கொரோனா வைரஸ் காய்ச்சலை, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை அறிவிக்கலாமா என்பதை தீர்மானிக்க ஒரு முக்கிய அவசர குழு வரும் இன்று புதன்கிழமை கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக சீனாவில் பல பகுதிகளில், பொதுமக்கள் அனைவரும் முகமூடி (வாய்க் கவசம்) அணிந்து செல்வதை காண முடிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து