குடியுரிமை திருத்த சட்டம் பற்றி ராகுல் காந்தி- மம்தா பொதுவெளியில் விவாதிக்க தயாரா? - மத்திய மந்திரி அமித்ஷா சவால்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020      இந்தியா
AmitShah 2020 01 21

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பொதுவெளியில் விவாதிக்க தயாரா? என ராகுல், மம்தா, மாயாவதி உள்ளிட்டோருக்கு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.  

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் லக்னோவில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்த சட்டம் ஒருபோதும் திரும்ப பெறப்படாது என்று தெரிவித்தார்.  இந்த கூட்டத்தின் போது அவர் பேசியதாவது;-

“எதிர்கட்சியினரின் கண்கள் ஓட்டுவங்கி என்ற திரையால் மறைக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களால் உண்மையை காண முடியாது.

ராகுல் காந்தி, மம்தா, மாயாவதி உள்ளிட்டோர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாட்டின் எந்த பகுதியில் வைத்தும் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? குடியுரிமை திருத்த சட்டத்தில் ஒருவரது குடியுரிமையை பறிக்கும் ஏதாவது ஒரு அம்சத்தை அவர்கள் எனக்கு காட்டட்டும்.

எதிர்ப்புகளை கண்டு ஒருநாளும் நாம் பயப்படப்போவதில்லை. எத்தகைய போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது” என்று அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து