நாளை அனைத்துக் கட்சி கூட்டம் : தி.மு.க. திடீர் அழைப்பு

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      தமிழகம்
anna-arivalayam 2020 01 22

நாளை 24-ம் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., வி.சி.க., கொ.ம.க, முஸ்லீம் லீக் , ம.ம.க. உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,

மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு  ஆகியவற்றுக்கு எதிராக  அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஜனவரி 24-ம் தேதி தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து