முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தேவஸ்தான அனைத்துக் கோவில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் முதன்மை செயல் அலுவலர் கூறினார்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில் மூத்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடக்காமல் பக்தர்களுக்கு அமைதியாக சேவை செய்த அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள், ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள், சாரண-சாரணியர் போலீசார் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருமலையில் உள்ள அன்னதானக்கூடம், திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம் ஆகிய தங்கும் விடுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பக்தர்கள் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் விடுதிகளில் அறையை முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்தக் கார்டுகள் மூலம் தங்க டாலர்களும் விற்பனை செய்யப்படும். பக்தர்கள் மரக்கன்றுகளை காணிக்கையாக வழங்கலாம். அதை பூங்காக்களில் நடவு செய்யப்படும். பூந்தி தயாரிக்கும் கூடத்தில் தீயணைப்பான் கருவிகள் கூடுதலாக வைக்கப்படும். திருமலையில் உள்ள தேவஸ்தான அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை திரையில் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படும். அலிபிரி நடைபாதை கான்கிரீட் மேற்கூரை புதிதாக கட்டப்பட உள்ளது. அந்தப் பணி விரைவில் தொடங்க உள்ளது. அலிபிரி நடைபாதையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். அதே போல் தேவஸ்தான அனைத்துக் கோவில்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து