முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் முதல் குடியரசு தினம்; தேசியக் கொடியேற்றி வைத்தார் துணைநிலை ஆளுநர் முர்மு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : காஷ்மீரில், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதன் முதல் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் துணை நிலை ஆளுநர் ஜி.சி. முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

காஷ்மீரில் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் குடியரசு தினம் முதன்முறையாக கொண்டாடப்பட்டது. ஜம்முவில் துணை நிலை ஆளுநர் ஜி.சி. முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஸ்ரீநகரில் உள்ள ஷெரி காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த விழாவில் லெப்டினன்ட் கவர்னரின் ஆலோசகர் பாரூக் கான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

ஜம்முவில் துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு தேசியக் கொடியை ஏற்றிய பின் ஆற்றிய உரையில்,

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தின் ஆண்டு. தற்காலிக விதிகளை ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையிலான நிதி மற்றும் சட்டரீதியான தடைகள் தகர்த்தெறியப்பட்டுள்ளன. இது காஷ்மீரை அதன் உண்மையான அர்த்தத்தில் தேசத்துடன் ஒன்றிணைத்துள்ளது. அப்பாவி இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட பாதையில் செல்ல சில தீய சக்திகளால் அறிவுறுத்தப்படுவதால், பயங்கரவாதம் நமது மிகப்பெரிய கவலையாக உள்ளது. இருப்பினும் இங்கு பயங்கரவாதம் தற்போது குறைந்து விட்டது. இவ்வாறு துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே மொபைல் சேவைகள் மற்றும் இணையதள சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் மீட்டமைக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு மொபைல் தரவு சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், நேற்று அதிகாலையில் மொபைல் போன் இணைப்பு நிறுத்தப்பட்டது. தொலைபேசி அழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் (மெஸேஜ்) , இணைய தள போன்ற சேவைகள் நேற்று மாலை 6 மணிக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து