முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பயங்கரம் - பா.ஜ.க.செயலாளர் வெட்டிக் கொலை

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

திருச்சி : திருச்சி வரகனேரி பென்ஷனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு வயது (39), இவர் திருச்சி பாலக்கரை பாரதிய ஜனதா கட்சியின் மண்டல் செயலாளராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியும் செய்து வந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் நுழைவு கேட்டில் பணம் வசூலித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் விஜயரகுவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதில் ஒருவர் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாலால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்தவர்கள் விஜயரகுவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமணைக்கு கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த கொலை குறித்து காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலைக்கு காரணம் தொழில் முன்விரோதமா அல்லது காதல் பிரச்சனையா என்று விசாரணையில் தெரிய வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து