இளம் வீரர்கள் எப்படி செயல்பட வேண்டும் விராட், ரோகித் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      விளையாட்டு
Shreyas Iyer 2020 01 27

ஆக்லாந்து : இளம் வீரர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை விராட் கோலி, ரோகித் சர்மாவை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதிய இரண்டாவது சர்வதேச டி20 போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்திய அணியில் 4வது இடத்தில் களமிறக்கப்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக விளங்குகிறார். 2-வது 20 ஓவர் போட்டியில் ரோகித், விராட் துவக்கத்திலே அவுட்டாகினர். அப்போது 4வது வீரராக களமிறங்கினார். முதலில் நிதானமாக ஆட்டத்தை துவங்கிய ஐயர் பின்னர்  நேரம் செல்ல செல்ல அதிரடி ஆட்டத்துக்கு மாறினார்.  இதனால் இந்திய அணி 2-வது 20 ஓவர் போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணியின் 4வது இடம் குறித்த தேர்வாளர்களின் நீண்டநாள் தலைவலியை அவர் போக்கியுள்ளார்  ஐயர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து