ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - கால்இறுதியில் ஹாலெப், டொமினிக் முன்னேற்றம்

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      விளையாட்டு
Halep-Dominic quarter 2020 01 27

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்திற்கு ஹாலெப் மற்றும் டொமினிக் தகுதி பெற்றுள்ளனர். கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் 4-வது வரிசையில் உள்ள ஷிமோனா ஹாலெப் (ருமேனியா) 16-வது இடத்தில் உள்ள மெர்டன்சை (பெல்ஜியம்) எதிர்கொண்டார்.

இதில் ஹாலெப் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த அனெட்டை சந்திக்கிறார். அடுத்த கால்இறுதி ஆட்டங்களில் ஆஸ்ரே பார்ட்டி (ஆஸ்திரேலியா)- கிவிட்டோவா (செக் குடியரசு), சோபியா கெனின் (அமெரிக்கா)-ஜாபெர் (துனிசியா) மோதுகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள டொமினிக் தீயம் (ஆஸ்திரியா)- மான்பில்ஸ் (பிரான்ஸ்) மோதினார்கள். இதில் டொமினிக் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று முதல் முறையாக ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) அல்லது கியோர்ஜியோசை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து