முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டசபை தேர்தல்: வரும் 3, 4-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரசாரம்

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      அரசியல்
Image Unavailable

டெல்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிப்ரவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அடங்கிய பேச்சாளர் பட்டியலை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கிழக்கு டெல்லியில் பிப்ரவரி 3-ம் தேதியும், துவாரகா பகுதியில் 4-ம் தேதியும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து