முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடமுழுக்கு விழா: தஞ்சை கோவில் கோபுரத்தில் 12 அடி உயர கலசம் ஏற்றம்

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2020      ஆன்மிகம்
Image Unavailable

தஞ்சை : தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா வருகின்ற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்று அந்த பிரம்மாண்ட கோபுரத்தில் 12அடி உயர கலசம் ஏற்றும் நிகழ்வானது நடைபெற்றது. இந்த கும்பகலசத்தில் 500 கிலோ எடையுள்ள நவதானியங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடமுழுக்கு விழா நடைபெற இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில் அதற்கான பணிகளை தொல்லியல்துறை அதிகாரிகளும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் விரைவாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி தங்க உலாம் பூசுவதற்காகவும் மெருகேற்றுவதற்காக இறக்கப்பட்ட தஞ்சை பெருவுடையார்  கோயிலின் பெரிய கும்பகலசம் இறக்கப்பட்டு அதற்கான பணிகள் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் பெரிய கோயில் பெரிய கும்பகலசத்திற்கு பல்வேறு கட்ட சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு கோபுரத்தின் மீது ஏற்றப்பட்டது. இந்த கும்பகலசம் ஏற்றும் போது பல்வேறு சிவனடியார்களும் ஓதுவர்களுக்கும் அதிகமான சிவனுடைய பாடல்களை பாடி அந்த கும்பகலசத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்து கோபுரத்தின் மீது ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருக்கக் கூடிய கோயில்களுக்கு கலசங்கள் ஏற்றப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பெரிய விமானம் என்று அழைக்கப்படும் கோபுரத்தின் கும்ப கலசத்திற்கு தங்க உலாம் பூசும் பணிகளை தொல்லியல் துறை அதிகாரிகள்  கடந்த 15 நாட்களாக மேற்கொண்டு வந்தார்கள். கும்பகலசம் வைப்பதற்காக 500-க்கும் மேற்பட்ட  கிலோ அளவில் வரகு, நவதானியங்கள் நிரப்பப்பட்டு தற்போது பெரிய கோயில் பெரிய கும்பகலசத்தை ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தஞ்சை பெருவுடையார்  கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 3000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோயில் வளாகத்திற்குள் வரக்கூடிய வெளிநாட்டு பக்தர்களும், தமிழகத்தை சார்ந்த பக்தர்களும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ள அனுப்பி வருகின்றனர். அதை போன்று உயரதிகாரிகளுக்கும் வெளிநாட்டில் இருந்து வரக் கூடிய பக்தர்களுக்கும் தனியாக கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து டி.ஜி.பி. வர உள்ளார். அவரிடம் இருந்து மக்களுக்கு கொடுக்கக்கூடிய பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து