Idhayam Matrimony

பெண்கள் கிரிக்கெட்: முத்தரப்பு டி20 இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு பெண்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணிகளுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லீக் சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இரு அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பெத் மூனி ஆட்டமிழக்காமல் 71 (54 பந்துகள்) ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் ராஜேஸ்வரி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஷஃபாலி வெர்மா அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆனார். அதன் பின்னர் ஸ்மிர்தி மந்தனா மற்றும் ரிச்சா கோஷ் பொறுமையாக ஆடினர். சிறப்பாக விளையாடிய ஸ்மிர்தி மந்தனா அரைசதம் கடந்தார். அவர் 37 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெமியா ரொட்ரிகஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அருந்ததி ரெட்டி போன்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகியது. இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 144 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜெஸ் ஜோனாசென் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து