இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தக்கூடாது: சேத்தன் சவுகான்

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2020      விளையாட்டு
Chetan Chauhan 2020 02 12

மும்பை : இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புணர்வு நன்றாக இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் தொடர் நடத்தக்கூடாது என்று சேத்தன் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதால் இரு நாடுகளுக்குமிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில்லை. ஆனால் சில வீரர்கள் கிரிக்கட் போட்டி நடத்த ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் இருநாட்டு கிரிக்கெட் தொடரை நடத்தக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேத்தன சவுகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேத்தன் சவுகான் கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருநாட்டு கிரிக்கெட் தொடர் நடக்கக் கூடாது. இருநாடுகளுக்கும் இடையிலான நட்புணர்வு சிறந்ததாக இல்லை. பாகிஸ்தானில் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல. பயங்கரவாதிகள் கிரிக்கெட் மீது அக்கறை கொள்ளவில்லை. பயங்கரவாதம் பாகிஸ்தானில் உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் நடத்த முடியாது’’ என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து