போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை மத்திய அரசு சகித்து கொள்ளாது - பிம்ஸ்டெக் மாநாட்டில் அமித்ஷா பேச்சு

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020      இந்தியா
Amit-Shah 2020 02 13

புது டெல்லி : போதைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்படுவதையும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதையும் மத்திய அரசு சகித்துக் கொள்ளாது என்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிக்குடா கூட்டுறவு என்னும் பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பைச் சேர்ந்த நாடுகள் பங்கேற்கும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மாநாட்டை நேற்று டெல்லியில் தொடங்கி வைத்து பேசிய அமித்ஷா, போதைப் பொருட்கள் கடத்தலால் பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க புதிய வழிமுறைகளை இந்த மாநாடு கண்டறியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 2018-ம் ஆண்டில் காத்மண்டுவில் நடைபெற்ற 4-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த 2 நாள் மாநாட்டிற்கு ஏற்பாடுச் செய்துள்ளது. பிம்ஸ்டெக் அமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய 7 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இம்மாநாட்டில் பங்கேற்று இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து