முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 - வது வீரராக களம் இறங்கினால் கூட ராகுலால் சதம் அடிக்க முடியும்: தவான்

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : 12-வது வரிசையில் களம் இறங்கினால் கூட அவரால் சதம் அடிக்க முடியும் என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மென்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். சமீப காலமாக அவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 27 வயதான ராகுல் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் 1 சதம், 1 அரை சதத்துடன் 204 ரன்கள் குவித்தார். இதேபோல 20 ஓவர் தொடரில் 2 அரை சதத்துடன் 224 ரன்கள் எடுத்தார். இதற்கு முந்தைய ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய தொடர்களிலும் அவர் சாதித்து இருந்தார். குறைந்த பட்சம் 1 அரை சதத்தையாவது எடுத்து அவர் தனது திறமையை வெளிப்படுத்திருந்தார். தொடக்க வீரர் வரிசையில் ராகுல் அதிரடியாக விளையாடியதால் வழக்கமாக தொடக்கத்தில் களம் இறங்கும் ஷிகர்தவானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. காயத்தால் அவர் ஆடாதபோது அந்த இடத்தில் ராகுல் அபாரமாக விளையாடினார்.

இந்த நெருக்கடி காரணமாக தவான் ஆஸ்திரேலிய தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதனால் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடினார். 5 - வது வரிசையில் களம் இறங்கி அதிலும் அவர் சாதித்தார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 5-வது வீரராக களம் இறங்கி சதம் அடித்து முத்திரை பதித்தார். இந்தநிலையில் லோகேஷ் ராகுலின் ஆட்டத்தை தவான் பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:-

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராகுல் 5-வது வீரராக களம் இறங்கி ஆடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடித்தது பிரமாதமானது. சிறப்பாக அவர் தனது பேட்டிங் வலிமையை தொடர்ந்து தக்க வைத்துள்ளார். 12-வது வீரராக களம் இறங்கினால் கூட ராகுலால் சதம் அடிக்க முடியும். இவ்வாறு தவான் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து