முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு இரக்கம் காட்டுபவர்- பா.ஜ.க குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களை ராகுல் காந்தி தனது கருத்துகள் மூலம் அவமதித்து விட்டதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. 

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றதன் ஓராண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. 

பிரதமர் மோடி, அமித் ஷா உள்பட பல்வேறு தலைவர்களும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நேற்று மரியாதை செலுத்தினர்.  இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி புல்வாமா தாக்குதல் குறித்து ஒரு சில கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நமது 40 சி.ஆர்.பி.எப் தியாகிகளை இன்று நினைவில் கொள்கிறோம். சரி இதை கேட்போம் : 1. இந்த தாக்குதலில் இருந்து அதிகம் பயனடைந்தவர் யார்? 2. தாக்குதல் தொடர்பான விசாரணையின் விளைவு என்ன? 3. தாக்குதலை அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பா.ஜ.க அரசில் பொறுப்பேற்றது யார்? என ராகுல் காந்தி பதிவிட்டார். 

ராகுல் காந்தியின் இந்த கருத்துகளுக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல் நரசிம்ம ராவ், ‘புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நாடு மரியாதை செலுத்தும் போது, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவின் அனுதாபியான ராகுல்காந்தி, அரசாங்கத்தை மட்டுமல்ல, பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து விமர்சிக்கிறார். உண்மையான குற்றவாளியான பாகிஸ்தானை ராகுல் ஒருபோதும் கேள்வி கேட்க மாட்டார். அவமானம்’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து