பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் முதல் இடம் யாருக்கு? டுவிட்டரில் டிரம்ப் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      உலகம்
trump 2020 02 16

வாஷிங்டன் : ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் முதல் இடம் யாருக்கு என்பதை டுவிட்டரில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

உலக அளவில் பெரும்பான்மையான இணையதளவாசிகளால் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த தளத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களும் ஆர்வமுடன் பயன்படுத்துகின்றனர். இந்த தளத்தில் அவர்களை கோடிக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் முதல் இடம் யாருக்கு என்பதை தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

மிகப்பெரிய கவுரவம் என்று கருதுகிறேன். ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் முதல் இடம், இரண்டாம் இடம் இந்திய பிரதமர் மோடிக்கு என்று சமீபத்தில் மார்க் ஜூக்கர் பெர்க் (‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி) கூறி இருக்கிறார்.

இன்னும் 2 வாரங்களில் நான் இந்தியாவுக்கு செல்கிறேன். இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து