உடற்தகுதி பெற்றார் இஷாந்த் சர்மா: இந்திய அணி நிர்வாகம் நிம்மதி

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      விளையாட்டு
Ishant Sharma 2020 02 16

மும்பை : நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இஷாந்த் சர்மா உடற்தகுதி பெற்றதால் அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் வருகிற 21-ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இஷாந்த் சர்மா இடம் பிடித்திருந்தார்.ஆனால் ரஞ்சி கோப்பையின்போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன் உடற்தகுதியை நிரூபித்தால் அணியில் இணையலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் தேசிய அகாடமியில் உடற்தகுதியை நிரூபித்துள்ளார். இதனால் இஷாந்த் சர்மா நியூசிலாந்து செல்ல இருக்கிறார். அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா அணியில் இணைவதால் நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து