நவீன சாலைகளுடன் ஹைடெக் நகரமாக மாறும் திருப்பதி

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020      இந்தியா
Tirumala tirupathi 2020 02 17

திருப்பதி : திருப்பதி மாநகராட்சியை ஹைடெக் நகரமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி கமிஷனர் கிரிஷா கூறினார். 

திருப்பதி நகர வளர்ச்சி மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில்  கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் துடா தலைவர் செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தர திருமலை-திருப்பதி தேவஸ்தானமும், வருவாய்த்துறையும் இடவசதி செய்து கொடுத்தால், நாங்கள் பார்க்கிங் வசதியைச் செய்து கொடுக்க தயாராக உள்ளோம். அதற்கான நிதியை வங்கியில் இருந்து பெற்றுக்கொள்வோம்.

திருப்பதியில் மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் சாலை பணிகளுக்காக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எஸ்.பி.ஏ. ஆகிய துறைகளில் நன்கு அனுபவமுள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சண்டிகார், மும்பை ஆகிய வளர்ச்சிப் பெற்ற நகரங்களுக்குச் சென்று, அங்குள்ள திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். அதற்கான பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். திருப்பதியில் பொது எரிமேடை புதிதாக அமைக்கப்பட உள்ளது.

அதற்காக, சிறப்புக் குழுவை சொந்தமான இடங்கள் சேகரிக்கப்பட உள்ளது. திருப்பதியில் மாஸ்டர் பிளான் திட்டப்பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பதி மாநகராட்சி கமிஷனர் கிரிஷா பேசுகையில், திருப்பதி மாநகராட்சியை ஹைடெக் நகரமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கும்.  அதற்காக, திருப்பதியில் மல்டி பிளக்ஸ் நிர்மானம், பூங்காக்கள், சாலைகள் சீர் செய்யப்பட உள்ளது, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து