டெல்லியில் நடந்த என்கவுண்டர்: 2 குற்றவாளிகள் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020      இந்தியா
ShotDead 2020 02 17

புதுடெல்லி : டெல்லியின் பிரகலாத்பூரில் நேற்று அதிகாலையில் நடைபெற்ற மோதலில் 2 குற்றவாளிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

டெல்லியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க, காவல்துறையின் சிறப்புக் படைவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில், பிரகலாத்பூரில் நேற்று அதிகாலையில் சிறப்பு படை போலீசார், குற்றவாளிகளை பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 2 பேர் பலத்த காயமடைந்து விழுந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த காரவால் நகர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் இவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து