முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரிகளில் ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

கல்லூரிகளில் ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது திருப்பத்தூர் தொகுதி உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் அரசு கலை கல்லூரி வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்க அரசு முன் வருமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளிக்கையில், திருப்பத்தூர் கல்லூரியில் ஆவின் பாலகம் அமைக்க கல்லூரியின் அனுமதி பெறப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அங்கு ஆவின் பாலகம் அமைக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது. கல்லூரி அனுமதி பெற காலதாமதம் ஆனதால் அமைக்கப்பட வில்லை. தற்போது அனுமதி பெறப்பட்டதால் அங்கு ஆவின் பாலகம் அமைத்து தரப்படும். அம்மா வழியில் நடைபெறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, கூடுதலாக ஆவின் பாலகங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் 163 ஆவின் பாலகங்களும், சென்னை மாநகராட்சியில் 23 ஆவின் பாலகங்களும், 206 கல்லூரிகளில் ஆவின் பாலகங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு தனியார் கல்லூரிகள் அனுமதி வழங்கும் பட்சத்தி்ல் அங்கும் ஆவின் பாலகங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  கல்லூரிகளில் ஆவின் பாலகங்கள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அதே போல் திருப்பத்தூரில் பால் குளிரூட்டு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என உறுப்பினர் கூறியுள்ளார். அங்கு அதிகமாக பால் வரத்து இருக்கும்பட்சத்தில் தனியாக குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படும். தனியார் நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்வதை விட ஆவின் நிறுவனத்திற்கு கொடுப்பதையே விவசாயிகள் விரும்புகின்றனர். இதற்கு காரணம் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை அதிகமாக வழங்குவதுதான் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து