முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை முதல் டெஸ்ட் தொடக்கம் கோலிதான் எனது முதல் இலக்கு என்கிறார் நியூசி. பவுலர் போல்ட்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

வெலிங்டன் : நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடிய போது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால், இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான நியூசிலாந்து அணியில் போல்ட் இடம் பெறவில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (பிப். 21) வெலிங்டனில் ஏக்லி ஓவல் அரங்கத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் டிரென்ட் போல்ட் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக வெயிட் பண்ண முடியாது என்று டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நான் போட்டியில் விளையாடும் போது விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விரும்புவேன்.

எனக்குள்ளே இப்படியொரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்வேன். அதனால், விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க காத்திருக்க முடியாது. அதேசமயம், கோலி தலைசிறந்த வீரர். அவர் எப்படி சிறப்பான ஆட்டத்தை விளையாடுவார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து