உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் - வரும் 24-ம் தேதி டிரம்ப் திறந்து வைக்கிறார் அதிகாரபூர்வ படத்தை வெளியிட்டது பி.சி.சி.ஐ.

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      விளையாட்டு
World s Largest Cricket Ground 2020 02 19

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உருவாகியுள்ள கிரிக்கெட் மைதானத்தை அதிபர் டிரம்ப் வரும் 24-ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இந்த மைதானத்தின் கழுகு பார்வை படத்தை பி.சி.சி.ஐ. தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குஜராத் மாநிலம் கிரிக்கெட் சங்கம் உருவாக்கியுள்ளது. அது, அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் என்ற பெயரில் உள்ளது. இந்த மைதானம் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மைதானமே உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து விளையாட்டை கண்டு ரசிக்கலாம். ஆஸ்திரேலியாவின் மைதானத்தை பின்னுக்குத் தள்ளும் விதமாக அகமதாபாத் மைதானம் உருவாகி உள்ளது.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிற 24-ம் தேதி இந்தியா வருகிறார். அதையடுத்து, மொடேராவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் வல்லபாய் படேல் மைதானத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மைதானத்தை அதிபர் டிரம்ப் திறந்து வைக்கவுள்ளார். தற்போது இந்த மைதானத்தின் கழுகு பார்வை படத்தை பி.சி.சி.ஐ. தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து