எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், மீன்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 27 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், மீன்வளத்துறை சார்பில், பாக் வளைகுடா பகுதி மீனவர்களின் இழுவலைப் படகுகளை மாற்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக பரவலாக்கும் திட்டத்தின் கீழ், 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக 7 மீனவர்களுக்கு அப்படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மீன்வளக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க கல்வி மூலம் தமிழகத்தின் மீன் உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டை மேம்படுத்தி வருகிறது. இப்பல்கலைக்கழகம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என்று 16.2.2018 அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இப்பல்கலைக்கழகம், மீன்வள அறிவியல் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் தரமான தொழிற் கல்வியை வழங்குதல், மீன்வள அறிவியலில் உள்ள முதன்மையான பிரிவுகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு முறையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், மீன்வளர்ப்போர், மீனவர், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு மீன்வள இணை தொழிற் கல்வியை வழங்குதல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு, ஓரடியம்புலத்தில் 4.78 ஏக்கர் நிலப்பரப்பில் 44,800 சதுர கட்டிட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், வரவேற்பறை, வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், கணிணி ஆய்வகம், கருத்தரங்கக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடம், நாகப்பட்டினம், வட்டார் நதிக்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 இருக்கைகள் கொண்ட நவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள கருத்தரங்கக் கூடம், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், அரியமானில் 3.46 ஹெக்டேர் நிலப்பரப்பில், 12,000 சதுரடி பரப்பளவில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்பிடித் தொழில்நுட்பப் பயிற்சி நிலையக் கட்டிடம், செங்கல்பட்டு மாவட்டம், வாணியஞ்சாவடியில், தமிழ்நாடு மீன்வள முதுகலை பட்டமேற்படிப்பு நிலையத்தில் 3 கோடியே 20 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடம் என மொத்தம் 27 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
பாக் வளைகுடா மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்திட மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் பாக் வளைகுடா பகுதியிலுள்ள 2000 இழுவலைப் படகுகளுக்கு பதிலாக புதிதாக ஆழ்கடல் தூண்டில் சூரை மீன்பிடிப்பு மற்றும் செவுள்வலை படகுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18ஆம் ஆண்டில் முதல்கட்டமாக, 500 இழுவலை படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக மாற்றிடும் இத்திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி, மத்திய அரசு பங்குத் தொகையுடன் 286 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு படகின் விலையான 80 லட்சம் ரூபாயில், 50 சதவிகிதம் மத்திய அரசின் மானிய உதவியுடனும், 20 சதவிகிதம் மாநில அரசு நிதியுதவியுடனும், 10 சதவிகிதம் பயனாளியின் பங்களிப்புடனும், மீதமுள்ள 20 சதவிகிதத் தொகை வங்கி கடனுதவி மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக படகு கட்டும் நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் மீனவ பயனாளிகளுக்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் இதர நிறுவனங்களால் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 8 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவப் பயனாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக 7 மீனவர்களுக்கு அப்படகுகளுக்கான பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி முறைப்படுத்தும் சட்டம் செயலில் இருந்தாலும், அதற்கான உட்கட்டமைப்பு, ரோந்து கலன்கள், மனித ஆற்றல் போன்றவை போதுமான அளவிற்கு இல்லாத காரணத்தினால், கடலில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மட்டுமின்றி, சட்டத்திற்கு முரணான மீன்பிடிப்பை தடுத்தல், மீன்வள ஆதாரத்தை பாதுகாத்தல், மீன்பிடிப்பை முறைப்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்துவதில் பெரும் தடைகள் உள்ளன. இத்தடைகளை களையும் வகையில், ஒரு காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணை கண்காணிப்பாளர், 10 காவல்துறை ஆய்வாளர்கள், 8 காவல்துறை சார் ஆய்வாளர்கள், 53 காவலர்கள், 17 காவல்துறை ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 112 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, மீன்வளத்துறைக்கென தனியே கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு புதிதாக தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் பணியாற்றும் காவல்துறை அலுவலர்கள் அவர்தம் பதவிக்கான சீருடையுடன், வலது மேற்கையில் இப்பிரிவிற்கென வடிவமைக்கப்பட்ட குறிவில்லையை அணிவார்கள்.
அதன்படி, தமிழ்நாடு கடல் மீன்பிடி முறைப்படுத்தும் சட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திட, கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவின் கொடியை காவல் துணை கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். மேலும், கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு அலுவலர்களுக்கென வடிவமைக்கப்பட்ட குறிவில்லையை வெளியிட்டு, 6 காவலர்களுக்கு குறிவில்லையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன், தலைமைச் செயலாளர் சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, மீன்வளத் துறை இயக்குநர் டாக்டர் சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.