முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

சென்னை:  ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை-கோவா அணிகள் மோத உள்ள முதல் அரை இறுதி முதல் கட்ட போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

ஐ.எஸ்.எல். சீசன் லீக் சுற்று முடிவுக்கு வந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த அரை இறுதி உள்ளூர்,வெளியூர் அடிப்படையில் 2 கட்டமாக நடக்கிறது. சென்னையின் எப்.சி. - கோவா எப்.சி. அணிகள் மோதும் அரை இறுதியின் முதல் கட்ட ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை பிப். 29ம் தேதி நடக்கிறது. சென்னை அணி முதல் 10 போட்டிகளில் 2 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி என்று தள்ளாடிக் கொண்டிருந்தது. பின்னர் புதிய எழுச்சியுடன் விளையாடிய அந்த அணி கடைசி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 டிரா என ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அரை இறுதியை உறுதி செய்துள்ளது.

புதிய பயிற்சியாளர் ஓவன் கோயல் வருகைக்கு பிறகு சென்னை அணி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து கோவா அணியும் வலுவான அணியாக தொடர்கிறது. இந்நிலையில், இந்த அணிகள் மோதும் முதல் கட்ட போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கும் என்ற சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நேரு விளையாட்டு அரங்கில் டிக்கெட் விற்பனை பிப். 28ம் தேதி 10ம் எண் வாயில் அருகே நடைபெறும். காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை டிக்கெட் விற்பனை நடக்கும். போட்டி நடைபெறும் பிப். 29ம் தேதி 1ம் எண் வாயில் அருகே டிக்கெட் விற்பனை செய்யப்படும். டிக்கெட் விலை ₹250 ரூபாய். புக்மைஷோ செயலி, இணையதளங்கள் மூலமாகவும் டிக்கெட் வாங்கலாம

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து