டெல்லி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்

திங்கட்கிழமை, 23 மார்ச் 2020      இந்தியா
delhi assembly 2020 03 23

புதுடெல்லி  : டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் முதன்முறையாக 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லி அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 23 அன்று பட்ஜெட் கூட்டத்தொடரை ஒரே நாளில் முடிக்க டெல்லி அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கையை நிதி மந்திரி மணிஷ் சிசோடியா நேற்று தாக்கல் செய்தார். கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு 50 கோடி ரூபாய், டெல்லியில் காற்று மாசுப்பட்டை கட்டுப்படுத்த 30 கோடி ரூபாய், 145 புதிய பள்ளிகள், சுகாதாரத்துறைக்கு 7704 கோடி என்பவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து