எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை : கொரோனா வைரஸ் தாக்குதல் மேலும் பரவாத வகையில் கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி,ஸ்பெயின்,ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிப்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை நிலவரப்படி 433 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் மேலும் பரவாத வகையில் கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் நேற்று நள்ளிரவில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பிறமாநிலங்களை இணைக்கும் எல்லைகள் சீல் வைக்கப்படும். அத்தியாவசியமான உணவுப்பொருள் சப்ளை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் சில நாட்கள் மிகவும் சவால்மிக்கதாக இருக்கும் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை அனுமதிக்க முடியாது. அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
கேரளா மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் அம்மாநிலம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பிறமாநிலங்களை இணைக்கும் எல்லைகள் அடைக்கப்படும். வெளிமாநில வாகனங்கள் கேரளாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |