வீட்டில் இருந்தபடியே வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் கோச்

திங்கட்கிழமை, 23 மார்ச் 2020      விளையாட்டு
Field coach 2020 03 23

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஸ்ரீதர், வீரர்கள் உடலை ‘பிட்’ஆக அப்படியே வைத்திருப்பதற்காக வீட்டில் இருந்தே பயிற்சி அளித்து வருகிறார்.

இந்தியா - தென்ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 12-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நடக்க இருந்தது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் லக்னோ, கொல்கத்தாவில் நடைபெற இருந்த ஆட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பின் பிசிசிஐ அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் ரத்து செய்தது. இதனால் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களுடைய உடலை ‘பிட்’ஆக வைத்திருப்பதில் மற்ற அணி வீரர்களை விட மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டுள்ளதால் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் வீட்டில் இருந்தே வீரர்களுக்கு கற்றுக் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி வீரர்கள் தங்களுடைய வீட்டில் உடற்பயிற்சி மேற்கொள்வதை வீடியோ எடுத்து ஸ்ரீதருக்கு அனுப்பி வைக்கின்றனர். அதில் ஏதாவது சரிசெய்ய வேண்டுமென்றால் ஆலோசனை வழங்குகிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து