எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கொரோனா வைரஸ் இல்லை
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முதற்கட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கொரோனா, உலக நாடுகள் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியில் இதுவரை கொரோனாவால் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இரண்டு பேருக்கு மேல் பொது இடத்தில் கூட ஏஞ்சலா மெர்க்கல் தடை விதித்துள்ளார். இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பாக்டீரியா தொற்றுக்கு எதிராக (pneumococcus bacteria) தடுப்பூசி போட மருத்துவர் ஒருவர், மெர்க்கலைச் சந்தித்தார். மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மெர்க்கல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதைத் தொடர்ந்து 65 வயதான ஏஞ்சலா மெர்க்கலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செய்தி ஊடகங்களிடம் பேசிய ஏஞ்சலாவின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபன் செபர்ட், பரிசோதனை முடிவில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இரண்டாவது பரிசோதனை விரைவில் எடுக்கப்படும் .தற்போது கொரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் மெர்க்கலாவிடம் இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார். வீட்டில் இருந்தபடியே நாட்டுப் பணிகளைக் கவனித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


