முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்களுக்கு ஒரு மாத ஊதியம் கூடுதலாக வழங்கப்படும் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

சென்னை : அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவ துப்புரவுப் பணியாளர்களுக்கு கூடுதலாக ஒருமாத சம்பளம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர் வேகத்தில் நடந்து வருகின்றன. ஆனால், கொரோனா வைரஸ் புயல் வேகத்தில் பரவுகிறது. மனிதனுக்கும் கிருமிக்குமான போராட்டத்தில் முன்னணி போர்ப்படைத் தளபதிகளாக விளங்குவது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள்தான். போர் முனையின் முன்னணியில் உள்ள இவர்களது பணி மகத்தானது. சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்து உலகுக்கு சொல்லி சிகிச்சை அளித்த மருத்துவர் தனது இன்னுயிரைத் தியாகம் செய்தார். கேரளாவில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பலரும் நோயின் தாக்கத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய தியாகப் பணியைச் செய்து வரும் மருத்துவர்களை நாட்டின் உயர்ந்த அமைப்பான மக்கள் சபையான சட்டசபையில் பாராட்டி கரவொலி எழுப்பப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒரு மாத ஊதியம் கூடுதலாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (24.3.2020) சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகளில் அர்ப்பணிப்போடு, தங்களை ஈடுபடுத்தி பணிபுரிகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதற்கு துணையாகச் செயல்படுகின்ற பிற துறைகளின் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி நன்றி தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து