முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 மாறுபட்ட வடிவங்களை கொண்டது கொரோனா வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

புதன்கிழமை, 25 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் 40 மாறுபட்ட வடிவங்களை கொண்டது ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசால் ஐஸ்லாந்தில் 600-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஐஸ்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பரவும் விதம்  40 மாறுபட்ட வடிவம் கொண்டு இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக அச்சம் தரும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

 ஐஸ்லாந்தில் சுகாதார அதிகாரிகள், மரபியல் நிறுவனமான டிகோட் மரபியல் உடன் இணைந்து, 9,768 பேரை கொரோனா வைரஸுக்காக பரிசோதித்ததாக தகவல் தகவல்கள் தெரிவிக்கின்றன.சோதனையில் மரபணு  பயன்படுத்தி, வைரஸ் எத்தனை வடிவங்கள் குவிந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இது ஒரு உயிரியல் செயல்முறையாகும், ஒரு மரபணுவின் கட்டமைப்பை மாற்றுவது, இதன் விளைவாக டி.என்.ஏ.வில் ஒற்றை அடிப்படை அலகுகளை மாற்றுவது அல்லது மரபணுக்கள் அல்லது குரோமோசோம்களின் பெரிய பிரிவுகளை நீக்குதல், செருகுவது அல்லது மறுசீரமைப்பதன் காரணமாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பரவக் கூடிய மாறுபட்ட வடிவத்தை ஏற்படுத்துகிறது. இது வைரஸ் மனித உடலை முதலில் தாக்க அனுமதிக்கும். மனிதர்களின் உடலை தாக்கும் திறனைப் பெறுவதற்கு முன்பு, பல ஆண்டுகளாக, ஒரு வேளை பல தசாப்தங்களாக கூட விலங்குகளில் பதுங்கியிருந்து இருக்கலாம் என  விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதன் மரபணுக்களை வரிசைப்படுத்தி வைரஸ் பற்றி முழுவதும் அறிந்து கொள்வதன் மூலம், அதற்கான தடுப்பூசியினை ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க முடியும்.

இந்த நிலையில் இது குறித்து பேசிய டிகோட் மரபியல் இயக்குனர் கோரி ஸ்டீபன்சன், முழுமையான மரபணு வரிசைமுறை செய்யப்பட்டு, வைரஸ் எவ்வாறு உருவானது மற்றும் பரவும் சங்கிலி பற்றிய குறிப்புகளை ஆராய்ந்தோம். அப்போது 40 வைரஸ் மாறுபட்ட வடிவங்களை நாங்கள் கண்டறிந்தோம். ஒரு நபர் கொரோனா வைரஸின் இரண்டு வகைகளை கொண்டிருந்தார். மற்றொருவரின் உடலில் கலப்படமான பல வகை வடிவங்கள் இருந்தன . இதன்மூலம் சுமார் 365,000 பேர் வசிக்கும் தீவு தேசமான ஐஸ்லாந்தில் வைரஸ் எவ்வாறு நுழைந்தது என்பதை அறிய முடிந்ததாக கூறியுள்ளார். சோதனை செய்யப்பட்டவர்களில் சிலர் ஆஸ்திரியாவிலிருந்து வந்தவர்கள். இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றொரு வகை வந்துள்ளது. இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றாவது வகை வைரஸ் காணப்படுகிறது. அவர்களில் 7 பேர் கால்பந்து போட்டியை காண சென்றவர்கள் என தெரிவித்துள்ளார். இந்த ஆய்வானது தற்போது மற்ற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்காக அதிகாரபூர்வமாக வெளியிடப்படாமல் உள்ளதாக டெய்லி மெயில் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து