முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வுகானில் இரு மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கம்

புதன்கிழமை, 25 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் தொற்று பரவிய வுகான் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுகானில் கடந்த ஜனவரி மாதத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வுகான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு  அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும், வுகான் நகருக்கு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் சீனாவில் நோய்த் தொற்று ஏற்பட்ட வுகான் நகரில் 2 மாதங்களாக இருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது,. இதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும், பேருந்தில் பயணிக்கும் மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்று அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படுகின்றனர் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது. சீனாவின் வுகான் நகரில் உருவான கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து