எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 18 ஆயிரத்து 907 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் தொடர்ந்து உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது.
சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 197 நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. முதலில் சீனாவில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது சீனாவில் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு, உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், சீனாவை விட இத்தாலியில் அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. 18 ஆயிரத்து 907 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 114 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 94 ஆயிரத்து 908 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 13 ஆயிரத்து 95 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரசுக்கு அதிகபட்சமாக இத்தாலியில் 6820 பேரும், சீனாவில் 3281 பேரும் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 2991 பேரும், ஈரானில் 1934 பேரும், பிரான்சில் 1100 பேரும் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரசால் 782 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 562 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் குணமடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |