முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 25 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா 4,22,566-க்கும்  மேற்பட்டவர்கள் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஆட்டி வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு  பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல்  ஏப்ரல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்  அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி கொரோனா தொற்று அறிகுறி இருந்த யாருக்கும் பாதிப்பு இல்லை. ஊடரங்கு உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறவிருந்தது. ஏப்ரல்  15-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் முன்னதாக 1 முதல் 9 வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் பாஸ்  என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து