தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புதன்கிழமை, 25 மார்ச் 2020      தமிழகம்
vijayabaskar 2020 03 24

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 550 பேரைக் கடந்துள்ள கொரோனா பாதிப்பில், இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.

இந்நிலையில் நேற்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவிலிருந்து இஸ்லாமிய மத போதகர்கள் சுமார் 11 பேர் சேலம் வந்துள்ளனர். அவர்களுடன் வந்த வழிகாட்டி உள்ளிட்டோரைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில் அதில் இந்தோனேசிய நபர்கள் 4 பேருக்கும், உடன் இருந்த கைடு (வழிகட்டி) ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சேலத்தில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

5 புதிய நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 இந்தோனேசியர்கள், மற்றும் அவர்களுடன் பயணித்த சுற்றுலா வழிகாட்டிக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 22 முதல் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து