முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க செய்யவேண்டிய 10 கடமைகள் : மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் யோசனை

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை-எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ‘டுவிட்டரில்’ கூறியிருப்பதாவது:-

பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித்தொகையை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி உடனே வழங்க வேண்டும். குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடம் இருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயியின் குடும்பத்திற்கும் ரூ.12 ஆயிரம் உடனே வழங்க வேண்டும்.மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.3,000 உடனே வழங்க வேண்டும். ஜன்தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் (நகர்ப்புற வங்கி கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ.3,000 உடனே வழங்க வேண்டும். ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்க வேண்டும். ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளையோ, ஊதியத்தையோ குறைக்கக்கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்.

மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும், ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளை பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு திறந்து அந்த கணக்கில் ரூ.3,000 உடனே வழங்கவேண்டும். எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கு இறுதி நாளை ஜூன் 30 - ந்தேதிக்கு ஒத்தி வைக்கவேண்டும். வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய மாத தவணை இறுதி நாட்களை ஜூன் 30 - ந்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும். மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பொருட்கள், சேவைகள் மீது உள்ள ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 5 சதவீதம் உடன் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து