எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கோவிட்-19 பாதிப்புக்கு இதுவரை 1,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். 8 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோவிட் -19 காய்ச்சலால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டும் சுமார் 400-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1000 பேரில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். அவர்கள் அனைவரும் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் செயலாளர் சாபர் மிர்சா கூறும் போது, பாகிஸ்தானில் கோவிட்-19 காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 24 சதவீதம் பேர் இளைஞர்கள். ஆனால், பிற நாடுகளில் வயதானவர்களே கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது முரணாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது. சீனாவின் வுகான் நகரில் உருவான கோவிட் -19 (கொரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


