கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஜி 20 தலைவர்கள் ஆலோசனை

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      உலகம்
G20 2020 03 26

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஜி 20 தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

உலகம் முழுவதையும் கொரோனா  வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில்,  ஜி 20 மாநாடுகளின் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.  வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடியும் பங்கேற்றார்.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில், சார்க் உறுப்பு நாடுகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இணைந்து, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து அவருடன் பேசினார். இந்த நிலையில், ஜி 20 நாடுகளின் தலைவர்கள் நேற்று கொரோனா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். ஜி - 20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து