Idhayam Matrimony

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: ஏழைகள் பசியாற்ற ரூ. 50 லட்சம் கங்குலி நிதியுதவி: பி.வி.சிந்துவும் நிதியுதவி அளித்தார்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

கொரோனா வைரஸை ஒழிக்கும் போரில் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைக்குச் செல்ல முடியமல் ஊதியம் கிடைக்காமல் இருக்கும் ஏழை மக்களுக்குப் பசியாற்ற அரிசி வாங்குவதற்காக சவுரவ் கங்குலி ரூ.50 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்

கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான தடுப்பு நடவடிக்கையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதை ஏற்று மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 649 பேராக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அதிலும் சமானிய மக்கள், கூலித்தொழிலாளர்கள், ஏழைகள் நிலை பெரும் கவலைக்குள்ளாகி இருக்கிறது. இவர்களின் பசியாற உணவு வழங்குவது முக்கியமாக இருந்து வருகிறது. இவர்களின் பசியாறும் வகையில் பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி ரூ.50 லட்சத்தை நிதியாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் அமைப்பு வெளியி்ட்ட அறிவிப்பில், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த 21 நாட்களில் வேலைக்குச் செல்ல முடியாமல், ஊதியம் கிடைக்காமல் ஏழை மக்கள், விளிம்பு நிலை மக்கள் துயரத்துக்கு ஆளாவார்கள். அவர்களின் பசியைப் போக்குவதற்காக பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தப் பணம் மூலம் ஏழை மக்களுக்கு அரிசி வழங்கப்படும். லால் பாபா ரைஸ் நிறுவனமும் உதவி செய்துள்ளது. சவுரவ் கங்குலியின் இந்த உதவி செய்யும் மனப்பான்மையைப் பார்த்து மற்ற மாநிலங்களில் உள்ள மக்களும் தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஆந்திராவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். பி.வி.சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக இரு மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து