முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு எதிரான போர்: மத்திய அரசுக்கு ராகுல் பாராட்டு

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா வைரஸ் தடுப்புக்கு எதிரான போரில் மக்களுக்கு அறிவித்துள்ள நிதித் தொகுப்பு மூலம் மத்திய அரசின் முதல் நடவடிக்கை சரியான திசையில் செல்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.

உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொடூர அரக்கன் கொரோனா வைரஸுக்கு இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 4.72 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் 13 பேர் உயிரிழந்துள்ளா். 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸைத் தடுக்க மத்திய அரசு மிகப்பெரிய, அசாத்தியமான நடவடிக்கை எடுத்தால்தான் கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

 காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், 21 நாட்கள் ஊரடங்கில் ஏழை மக்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். அதன்படி மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பில் நிதித்தொகுப்பை ஏழை, எளிய மக்களுக்காக அறிவித்ததது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். அவர் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மத்திய அரசு ஏழை மக்களுக்கு நிதித்தொகுப்பை அறிவித்துள்ளது. சரியான திசையில் செல்லும் முதல் நடவடிக்கையாகும். இந்த ஊரடங்கு உத்தரவால் முதியோர், பெண்கள், தொழிலாளர்கள், கூலித்தொழிலாளிகள், விவசாயிகள் ஆகியோர் பெரும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். இவர்களுக்காக இந்தியா கடன்பட்டிருக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து