போட்டி ரத்தாகும் சூழ்நிலையிலும் ஐ.பி.எல். தொடருக்காக தயாராகி வரும் வீரர் பென் ஸ்டோக்ஸ்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      விளையாட்டு
SPORTS-2 2020 03 26

Source: provided

லண்டன் : கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். தொடர் ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்காக தயாராகி வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

ஐ.பி.எல். 2020 சீசன் வருகிற 29-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனாவின் தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது காட்டுத்தீ போன்று கொரோனா பரவி வருவதால் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் கட்டுக்குள் வந்து விடுமா? என்பது சந்தேகம்தான். இதற்கிடையில் இந்தியாவில் அடுத்த மாதம் 14-ம் தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்படும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் தயாராகி வருகிறார். இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், தற்போதுள்ள நிலையில் என்னுடைய அடுத்த கிரிக்கெட் தொடர் ஐ.பி.எல்.தான். இதுவரை இதில் மாற்றமில்லை. இதனால் ஏப்ரல் 20-ம் தேதி விளையாடுவேன் என்று நினைக்கிறேன்.

ஒருவேளை போட்டி நடைபெற்றால் சிறந்த நிலையில் நான் செல்ல வேண்டும். அதனால் உடற்தகுதியை விளையாடுவதற்கு ஏற்ற வகையில் வைத்திருக்க வேண்டும். என்னால் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க முடியாது. ஏப்ரல் 20-க்குள் உடல் தயாராகி விடும். ஏனென்றால் நான் விரும்பும் அளவிற்கு உடல்நிலை ஒத்துழைக்காது என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து